/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி பிஸ்னஸ் போரத்தின் புதிய நிர்வாகக்குழு பொறுப்பு ஏற்பு
/
தேனி பிஸ்னஸ் போரத்தின் புதிய நிர்வாகக்குழு பொறுப்பு ஏற்பு
தேனி பிஸ்னஸ் போரத்தின் புதிய நிர்வாகக்குழு பொறுப்பு ஏற்பு
தேனி பிஸ்னஸ் போரத்தின் புதிய நிர்வாகக்குழு பொறுப்பு ஏற்பு
ADDED : அக் 13, 2025 05:15 AM

தேனி : தேனி பிஸ்னஸ் போரத்தின் உறுப்பினர்களின் கூட்டம் தேனி தனியார் ஓட்டலில் நடந்தது. போரத்தின் நிறுவன இயக்குநர் மாஸ்டர் சேப்டி முத்துசெந்தில் தலைமை வகித்தார். பட்டயத் தலைவர் பால்பாண்டி முன்னிலை வகித்தார்.
புதிய தலைவராக வி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் விஜயகுமார், செயலாளராக குவாலிட்டி கேர் கணேசன், பொருளாளராக எஸ்.ஆர்., ஸ்போர்ட்ஸ் அண்டு டிராபிஸ் வெங்கடேஷ் பொறுப்பு ஏற்றனர்.
மேலும் இக்குழுவில் பிஸினஸ் ஒருங்கிணைப்பாளராக விடூ ஈவென்ட் வெங்கடேஷூம், விளக்க உரை ஒருங்கிணைப்பாளராக சோலார் ராஜேஷூம், உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பாளராக நாகாமோட்டார் முத்துக் குமாரும், உறுப்பினர்களின் நல்லுறவு மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளராக எல்.ஐ.சி., ராஜேந்திரன், போரத்தின் கூட்ட ஒருங்கிணைப்பாளராக விக்னேஷ்வரன், ஊடக ஒருங்கிணைப்பாளராக ராயல்வாட்ச் நாககார்த்திகேயன் பொறுப்பு ஏற்றனர்.
சிறப்பு விருந்தினராக தேனி, திண்டுக்கல் 'புரொபஷனல் கூரியர்' நிர்வாக இயக்குநர் சவுந்திரராஜன், ஆடிட்டர் ஜெகதீசன் பங்கேற்று பேசினர். போரத்தின் சார்பில் அவர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.
தலைவர் விஜயகுமார், நிறுவன இயக்குனர் முத்து செந்தில் ஆகியோர் பிஸ்னஸ் போரத்தின் வளர்ச்சி, எதிர்கால திட்டங்கள் குறித்து பேசினர். முன்னாள் தலைவர் வைகை ஆப்டிக்கல் வெங்கடேஷ், ஜெய் மார்க்கெட்டிங் அருண்குமார், சிவக்குமார் முட்டை நிலையம் அருண்குமார், நேஷனல் வாட்டர் பிரதீப், செல்லதுரை, முன்னாள் செயலாளர் ஆனந்த்பாபு, முன்னாள் பொருளாளர் ராமநாதன், போரத்தின் அணித் தலைவர்களாக தர்ஷினி, திலிப்குமார், அரசமணிகண்டன், தினேஷ்கண்ணன், ராகேஷ்குமார், விவேக் கார்த்திக், சரவணன் ஜெயராமன், கார்த்திக்குமார், பர்வீண்சிங் பொறுப்பு ஏற்றனர்.
உறுப்பினர்கள் பங்கேற்றனர். பிஸ்னஸ் போரத்தில் இணைய விரும்புவோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
ஏற்பாடுகளை நிர்வாகிகள், அணித் தலைவர்கள் செய்திருந்தனர்.