/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கிரிக்கெட் போட்டியில் 2 சிக்ஸர்கள் விளாசிய தேனி மாவட்ட கலெக்டர்
/
கிரிக்கெட் போட்டியில் 2 சிக்ஸர்கள் விளாசிய தேனி மாவட்ட கலெக்டர்
கிரிக்கெட் போட்டியில் 2 சிக்ஸர்கள் விளாசிய தேனி மாவட்ட கலெக்டர்
கிரிக்கெட் போட்டியில் 2 சிக்ஸர்கள் விளாசிய தேனி மாவட்ட கலெக்டர்
ADDED : அக் 27, 2025 04:15 AM

பெரியகுளம்: மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் தேனி மாவட்ட கிரிக்கெட் கிளப் அணி வீரராக பங்கேற்ற கலெக்டர் ரஞ்ஜீத்சிங், 2 சிக்ஸர்கள் விளாசி, அணியை வெற்றி பெறச் செய்தார்.
பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் மாநில அளவிலான பாக்ஸ் கிரிக்கெட் போட்டி நடந்தது. தேனி மாவட்டத்தில் முதல் முறையாக நடந்த இந்தப் போட்டியினை ஆர்.ஏ. ஸ்போர்ட்ஸ் அகடாமி, தேனி ராயல் லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்தின.
போட்டியில் தேனி, மதுரை, கோவை, கரூர், திருச்சி, திண்டுக்கல் அணிகள் உட்பட 20 அணிகள் பங்கேற்றன.
போட்டியினை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் துவக்கி வைத்து, தேனி மாவட்ட கிரிக்கெட் கிளப் அணி வீரராக பங்கேற்று, விளையாடினார்.
தேனி மாவட்ட கிரிக்கெட் கிளப் அணியும், தேனி பிசினஸ் பார்ட்னர் அணியும் மோதின.
இதில் பிசினஸ் பார்ட்னர் அணி ஆறு ஓவர்களுக்கு 85 ரன்கள் எடுத்தது. மாவட்ட கிரிக்கெட் கிளப் அணி ஆறு ஓவர்களில் 86 ரன்கள் எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த அணியின் வீரர் கலெக்டர் ரஞ்ஜீத்சிங், 2 சிக்ஸர்கள் உட்பட 19 ரன்கள் எடுத்து, தனது அணி வெற்றி பெற உறுதுணையாக இருந்தார்.--

