/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாநில தடகள போட்டி தேனி மாணவி சாதனை
/
மாநில தடகள போட்டி தேனி மாணவி சாதனை
ADDED : அக் 18, 2025 04:29 AM
தேனி: மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான 100 மீட்டர் தடகள போட்டி சென்னையில் நடந்தது.
இதில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரி ஆங்கிலத்துறை முதலாமாண்டு மாற்றுத்திறன் மாணவி பிரியங்கா போட்டியிட்டு முதலிடம் பெற்று தங்கப்பதக்கம், ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வென்றுசாதனை படைத்தார்.
இதற்காக மாணவியை கலெக்டர் ரஞ்ஜீத்சிங், உறவின்முறை தலைவர் தர்மராஜன், துணைத் தலைவர் ஜீவகன், பொதுச் செயலாளர்ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன், கல்லுாரிச் செயலாளர் மாறன்மணி, முதல்வர் சித்ரா, துணை முதல்வர்கள், உடற்கல்வித்துறை பேராசிரியர்கள் ரத்னா,தீபிகா, பாக்கியலட்சுமி, மாணவியின் வகுப்பு சகதோழிகள், பெற்றோர்ஆகியோர் பாராட்டினர்.