/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாநில கலைத்திருவிழா போட்டி தேனி மாணவர்கள் அசத்தல் ஆறு பேர் முதலிடம் பெற்று சாதனை
/
மாநில கலைத்திருவிழா போட்டி தேனி மாணவர்கள் அசத்தல் ஆறு பேர் முதலிடம் பெற்று சாதனை
மாநில கலைத்திருவிழா போட்டி தேனி மாணவர்கள் அசத்தல் ஆறு பேர் முதலிடம் பெற்று சாதனை
மாநில கலைத்திருவிழா போட்டி தேனி மாணவர்கள் அசத்தல் ஆறு பேர் முதலிடம் பெற்று சாதனை
ADDED : டிச 12, 2025 06:24 AM
தேனி: மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 6 மாணவர்கள் முதலிடமும், 4 பேர் இரண்டாமிடமும், இருவர் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவர்களின் கலைத்திறன், படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்த பள்ளிகல்வித்துறை சார்பில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்படுகிறது.
மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில போட்டிகளில் பங்கேற்றனர். கடந்த மாத இறுதியில் கரூர்,கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடந்தன. இப்போட்டியில் தேனி மாவட்டத்தை சேர்ந்த பி.சி., கான்வென்ட் பள்ளி மாணவி ஷக்தி மாறுவேடப்போட்டியிலும், தனிநபர் நடிப்பில் ஊஞ்சாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் தாசரதி, பானை ஓவியத்தில் ராயப்பன்பட்டி புனித அல்லோசியஸ் பள்ளி மாணவர் பவினேஷ் பாண்டி, பாவனை நடிப்பில் ராயப்பன்பட்டி சவரியப்ப உடையாளர் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஹர்ஷன், சிற்பம் செதுக்குதல் போட்டியில் கூடலுார் என்.எஸ்.கே.பி., பள்ளி மாணவி நவதான்யஸ்ரீ, களிமண் சிற்பம் போட்டியில் மாணவர் யோகேஸ்வரன் முதலிடம் பெற்றனர். கோட்டூர் ஆதிதிராவிடர் துவக்கப்பள்ளி மாணவி ஹரிணி, ராயப்பன்பட்டி புனித அல்லோசியஸ் பள்ளி மாணவர் நவநீத், ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் மணிவாசகம், கம்பம் ஏ.ஆர்., மேல்நிலைப்பள்ளி வைதிஷைஸ்ரீ ஆகியோர் 2ம் இடம் வென்றுள்ளனர். கோம்பை கன்னிகாபரமேஸ்வரி நடுநிலைப்பள்ளி மாணவி ஸ்ரீ ஹாசினி ரங்கோலியும், அழகாபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி மோகவர்ஷினி பாவனை நடிப்பில் மூன்றாம் இடம் பெற்றனர்.

