ADDED : ஏப் 26, 2026 01:31 AM

அ நிறம் | அளவு
பாலசமுத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் பழநி பாலசமுத்திரம் செல்லும் சாலையில் வரட்டாறு பாலத்தின் அருகே தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தேக்கம்பட்டியை சேர்ந்த தொழிலாளி கட்டையால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இங்கு வரட்டாறு பாலத்தின் அருகே 44 வயது நபர் இறந்து கிடந்தார். போலீசார் விசாரணையில் சட்டை பாக்கெட்டிலிருந்த ஆதார் கார்டு படி அவர் ஆண்டிபட்டி தேக்கம்பட்டியைச் சேர்ந்த முருகன் 44 ,என்பது தெரிந்தது. டீக்கடை தொழிலாளியான அவரது உடலில் கட்டையால் அடித்த காயங்கள் இருந்ததால் தாக்கி கொலை செய்திருக்கலாம் எனத்தெரிகிறது. இதற்கான காரணம் குறித்து பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
