ADDED : ஜூன் 05, 2026 01:36 AM
அ நிறம் | அளவு
தேனி: தேனி வையைத் தமிழ்சங்கம், நற்றமிழ்புலனம் இணைந்து தனியார் மருத்துவப் பயிற்சி மையத்தில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்தினர்.
வையைத்தமிழ்சங்க நிறுவனர் இளங்குமரன் தலைமை வகித்தார். போட்டியில் ஏழாம் வகுப்பு மாணவி பைந்தமிழ்ரோசினி 52 நிமிடங்களில் 1330 திருக்குறள்களை ஒப்புவித்தார். இதனை 'ஆல் இந்தியா வேர்ல்டு புக் ஆப் ரெக்கார்டு' அமைப்பினர் கண்காணித்து பதிவு செய்தனர். மாணவியை நிகழ்வில் பங்கேற்ற புலவர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.
