ADDED : மே 04, 2025 05:30 AM
அ நிறம் | அளவு
போடி, : போடி சி.பி.ஏ., கல்லூரி வளாகத்தில் ஒரு ஏக்கர் இடத்தில் பல்லுயிர்களுக்கான கானகம் உருவாக்கும் வகையில் 1000 மரக்கன்று நடும் விழா கல்லூரி செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் நடந்தது.
துணை தலைவர் ராமநாதன், நிர்வாக குழு உறுப்பினர் சிவப்பிரகாசம், முதல்வர் சிவக்குமார், நன்செய் அறக்கட்டளை நிர்வாகிகள் செந்தில், லோகேஷ் குமார், ரஞ்சித்குமார், இயேசுராஜா, சத்திய மூர்த்தி, செல்வகணேஷ், பாண்டி முன்னிலை வகித்தனர்.
எம்.பி., தங்கத் தமிழ்ச் செல்வன் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார். போடி தி.மு.க., நகர செயலாளர் புருஷோத்தமன், நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் சங்கர், கல்லூரி பேராசிரியர்கள், என்.சி.சி., என்.எஸ் எஸ் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
