/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நிருபரை அரிவாளால் தாக்கிய மூவர் கைது
/
நிருபரை அரிவாளால் தாக்கிய மூவர் கைது
ADDED : நவ 15, 2024 05:36 AM

கடமலைக்குண்டு: ஆண்டிபட்டி அருகே நிருபரை அரிவாளால் தாக்கிய 3 பேரை கண்டமனுார் போலீசார் கைது செய்தனர்.
கண்டமனுார் அருகே ஜி. உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் பால்பாண்டி 50, ஒரு நாளிதழில் நிருபராக பணிபுரிகிறார். நேற்று முன் தினம் பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் கோயிலை சுத்தம் செய்யும் பணியில் மனைவியுடன் ஈடுபட்டிருந்தார். அப்போது எரதிமக்காள்பட்டியைச் சேர்ந்த கணேசன், சின்னச்சாமி, ஜி.உசிலம்பட்டியைச் சேர்ந்த பாண்டிக்கண்ணன் ஆகியோர் அப்பகுதியில் அரிவாளுடன் ஓடிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்து எங்கே ஓடுகிறீர்கள் என்று பால்பாண்டி கேட்டார். அப்போது கையில் வைத்திருந்த அரிவாளால், பால்பாண்டியின் இடது பக்க தலையில் வெட்டினர்.
இதில் பால்பாண்டி காயம் அடைந்தார். அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கண்டமனுார் போலீசார் மூவரையும் கைது செய்தனர்.