தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ ரேஷன் அரிசி கடத்திய மூவருக்கு குண்டாஸ்

ரேஷன் அரிசி கடத்திய மூவருக்கு குண்டாஸ்

ரேஷன் அரிசி கடத்திய மூவருக்கு குண்டாஸ்


ADDED : ஏப் 10, 2025 06:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2025 06:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உத்தமபாளையம்: ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட தேனி அல்லிநகரத்தை சேர்ந்த ரவிக்குமார் 38, துரைப்பாண்டி 35, கம்பத்தை சேர்ந்த அஜ்மல்கான் 45,ஆகிய மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தேனி கலெக்டர் ரஞ்ஜித் சிங் உத்தரவிட்டார்.

கம்பம் பகுதியிலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தல் தொடர்கிறது.

கடந்த மார்ச் 18 ல் தேனி அல்லிநகரம் ராஜ வீதி நகரில் செந்தில் குமார் வாடகைக்கு எடுத்து நடத்தி வரும் மாவு மில்லில் மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிச்செல்வி தலைமையிலான குழுவினர் சோதனை செய்தனர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 26 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய அல்லிநகரம் ரவிக்குமார், துரைப் பாண்டி, கம்பத்தை சேர்ந்த அஜ்மல்கான் ஆகியோரை உத்தமபாளையம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு எஸ்.ஐ முத்துப்பாண்டி தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்களின் தொடர் நடவடிக்கையை கட்டுப்படுத்த இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் பரிந்துரையின் பேரில் தேனி கலெக்டர் ரஞ்ஜித் சிங் மூவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளரிடம் போலீசார் வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us