/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கஞ்சா, கொலை வழக்கில் ஈடுபட்ட மூவருக்கு குண்டாஸ்
/
கஞ்சா, கொலை வழக்கில் ஈடுபட்ட மூவருக்கு குண்டாஸ்
ADDED : நவ 23, 2025 03:38 AM
தேனி: கஞ்சா கடத்தியவர், கொலைவழக்கில் தொடர்புடைய இருவர் ஆகிய மூவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டார்.
உத்தமபாளையம் தாலுகா கீழக்கூடலுார் சாய் 41. இவர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட போது தேனி மதுவிலக்கு போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். அவரிடமிருந்து 8.215 கி.கி., கஞ்சாவை கைப்பற்றினர். பெரியகுளத்தை சேர்ந்தவர் ஜெயபால். இவரை கடந்த மாதம் சிலர் கொலை செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய பங்களாபட்டி பெரியார் காலனி மருதமுத்து 23, வடகரை கும்பக்கரை ரோடு முத்துப்பாண்டி 21 ஆகியோரை பெரியகுளம் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., சினேஹா பிரியா கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவில் மூவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

