UPDATED : அக் 10, 2026 07:26 PM
ADDED : அக் 10, 2026 07:24 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை பாரதி நகர் பாலாஜி 32.
இவரது மனைவி திவ்யா 30. இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. ஒரு குழந்தை உள்ளது. திருமணத்தின் போது திவ்யாவிற்கு 20 பவுன் தங்க நகை சீர்வரிசையாக வழங்கினர். பாலாஜி, இவரது தந்தை வடிவேல், தாயார் மல்லிகா ஆகியோர் 20 பவுன் தங்க நகையை அடகு வைத்தனர். மேலும் தங்க நகைகள், ரூ.2 லட்சம் கூடுதல் வரதட்சணை கேட்டு திவ்யாவை வீட்டில் இருந்து வெளியே அனுப்பினர். திவ்யா புகாரில் பெரியகுளம் அனைத்து மகளிர் போலீசார் பாலாஜி,வடிவேல், மல்லிகா மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
