ADDED : ஆக 27, 2026 07:12 PM
அ நிறம் | அளவு
தேனி, ஆக.28–ஆண்டிபட்டியில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கிய செல்வி 42,யை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் கம்பம் உலகத்தேவர் தெரு ராஜேந்திரன் 51, என்பவரை கம்பம் வடக்கு போலீசார் கைது செய்திருந்தனர். கொலை வழக்கில் தேவாரம் அமராவதி நகர் சடையாண்டி 46, என்பவரை கொலை வழக்கில் அல்லிநகரம் போலீசார் கைது செய்தனர். மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., பிரவீன்கவுதம் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் வைத்திநாதன் உத்தரவில் செல்வி, ராஜேந்திரன், சடையாண்டி ஆகிய மூவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
