ADDED : செப் 07, 2026 09:40 PM
அ நிறம் | அளவு
தேனி, செப்.
8–பெரியகுளம் தாலுகா மேல்மங்கலம் முத்துபாண்டி 22. இவர் மீது ஜெயமங்கலம் போலீசில் பொதுமக்களுக்கு அச்சுருத்தும் விதமாக செல்படுவதாக வழக்குகள் பதிவாகின. வீரபாண்டி கருப்பசாமி 28, வயல்பட்டி காயத்ரி 30, ஆகியோர் விற்பனை செய்ய கஞ்சா வைத்திருந்த போது வீரபாண்டி போலீசார் கைது செய்தனர். மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு எஸ்.பி., பிரவீன் கவுதம் பரிந்துரை செய்தார். கலெக்டர் வைத்திநாதன் உத்தரவில் மூவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
