sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 தியானம் மூலம் தனிமனிதன், குடும்பம், உலகம் அமைதி பெற முடியும் அறிவுத் திருக்கோயில் திண்டுக்கல் மண்டல தலைவர் தாமோதரன் பேச்சு

/

 தியானம் மூலம் தனிமனிதன், குடும்பம், உலகம் அமைதி பெற முடியும் அறிவுத் திருக்கோயில் திண்டுக்கல் மண்டல தலைவர் தாமோதரன் பேச்சு

 தியானம் மூலம் தனிமனிதன், குடும்பம், உலகம் அமைதி பெற முடியும் அறிவுத் திருக்கோயில் திண்டுக்கல் மண்டல தலைவர் தாமோதரன் பேச்சு

 தியானம் மூலம் தனிமனிதன், குடும்பம், உலகம் அமைதி பெற முடியும் அறிவுத் திருக்கோயில் திண்டுக்கல் மண்டல தலைவர் தாமோதரன் பேச்சு


ADDED : டிச 28, 2025 05:44 AM

Google News

ADDED : டிச 28, 2025 05:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி அறிவுத் திருக்கோயிலில் நடந்த சர்வதேச தியான விழாவில் வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை, தியானம் மூலம் தனிமனித அமைதி, குடும்ப அமைதி, உலக அமைதி எவ்வாறு பெற முடியும் என்பதற்கான பயிற்சி கருத்தரங்கம் நடந்தது. இக் கருத்தரங்கில் பேசியதாவது:

நீண் ட ஆயு ள் தருகிறது எம்.கே.தாமோதரன், முதுநிலை பேராசிரியர், அறிவுத் திருக் கோயில், மண்டல தலைவர் திண்டுக்கல்: உலக தியான நாளில் தியானத்தின் முக்கியத்துவம், மனித குலத்திற்கு ஏற்படுத்தும் நன்மைகளை அறிவது சிறப்பாகும். தியானம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய கலாச்சாரத்தில் தோன்றியதாக அறியப்படுகிறது. இந்திய அரசு, மனித குலத்திற்கு பாரத கலாச்சாரத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையில் கடந்த ஆண்டு சமர்ப்பித்தது. 193 உறுப்பு நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு டிச. 21 உலக தியான தினமாக ஐ.நா., சபை அறிவித்தது.

தியான ம் மனிதனின் உடல், உயிர், மனம் அனைத்திற்கும் நன்மை தரக்கூடியது. சீரான தியானம் மூலம் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுகிறது. உளவியல் ரீதியாக தியானம் மூலம் மன அழுத்தம் குறைவதால் பதற்றம், மனச்சோர்வு, எதிர்மறை எண்ணங்களை போக்கி நேர்மறை எண்ணங்களை உருவாக்குகிறது. உயிர் சுழற்சி வேகம் குறைவதால் அது உயிர் ஆற்றல் நீண்ட ஆயுளையும் தருகிறது. வாழ்வில் வெற்றி, மகிழ்ச்சி, மனநிறைவு பெற தொடர் தியான பயிற்சி மேற்கொள்வோம்.

மன அமைதி கிடைக்கிறது சிவராமன், நிர்வாக அறங்காவலர், அறிவுத்திருக்கோயில், போடி: உலக அமைதிக்கு வித்தாகவும் உலகம் ஒரே குடும்பம் என்ற தத்துவத்தை உலகளாவிய நல்லிணத்தை நோக்கமாக கொண்டதாகும். டிச. 21 என்பது வானியலில் முக்கியத்துவம் பெறும் வகையில் சூரியன் உலகின் சரிபாதியில் இருந்து வடக்கு நோக்கி நகரும் தினத்தைக் குறிக்கிறது. இதை உத்தராயணம் என்கிறோம். இது பொதுவாக ஒளியை நோக்கி நகரும் காலம். அறியாமையில் இருந்து அறிவை நோக்கி பயணிப்பதாகும். மகரிஷியின் மனவளக்கலை தியானத்தில் உடல், உயிர், மன அமைதி பெறுவதற்கான அனைத்து பயிற்சிகளின் நோக்கமாகும். ஒரு மனிதனுக்கு உடற்பயிற்சி, தியானம், மூச்சு பயிற்சியாகும். வாழ்வில் நாம் விரும்பிய அனைத்தையும் அடைவதற்கு அடிப்படைத் தகுதி ஆரோக்கியமே. தியான தினத்தை நாம் அனைவரும் போற்றி. பிறருக்கும் இதன் நன்மைகளை கூறி உலக அமைதி பெறுவதற்கான சமுதாயத்தை உருவாக்க உதவுவோம்.

மன அழுத்தம் குறைகிறது சங்கிலிக்காளை, செயலாளர், அறிவுத் திருக்கோயில், போடி : தியானம் மூலம் நாம் பல்வேறு நேர்மறை விளைவுகளை பெற முடியும். தியானம் ஆன்மீக பயிற்சி மட்டும் அல்ல, நவீன அறிவியலாகும். மன அழுத்த ஹார்மோனாகிய கார்டிசோலின் அளவை குறைக்கிறது. நம்மில் பலர் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்று சரியாக புரிந்து கொள்ளாமல் தன்னிச்சையாக வாழ்க்கை முறையை கடைபிடிப்பது பல்வேறு நோய்களால் பாதிக்கின்றனர். யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி, முத்திரைகள், கிரியாஸ் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் எவ்வித நோய்களையும் குணப்படுத்த முடியும். நாள்பட்ட வலியை கட்டுப்படுத்த உதவுகிறது. தனிமனித அமைதி, குடும்ப அமைதி, உலக அமைதியை பெற வேதாத்திரி மகரிஷி வடிவமைத்த மனவளக்கலை உதவுகிறது. அறிவு திருக்கோயில் மனவளக் கலையை முறையாக அனுபவமிக்க ஆசிரியர்களால் மக்களுக்கு கற்றுத் தருவதை பெருமையாக கருதுகிறோம்.

வாழ்வில் மாற்றம் பெறலாம் காந்திமதி, பேராசிரியர், அறிவுத் திருக்கோயில், போடி: தியானம் என்பது கண்களை மூடி அமைதியாக உட்கார்ந்து இருப்பது மட்டும் அல்ல. நம் மனதை ஒருமுகப்படுத்தி, உள்முக பயணத்தை மேற்கொள்ளும் உண்மையான அமைதி, தெளிவை கண்டறியும் சக்தி வாய்ந்த கலையாகும். நவீன உலகில் வேலைப்பளு, வாழ்க்கை சவால்களால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க தியானம் சிறந்ததாகும். இதன் மூலம் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தவும், மன அமைதி, நினைவாற்றல், மனோசக்தி, அறிவாற்றல், புத்தி கூர்மை, முடிவு எடுக்கும் திறன் கிடைக்கிறது. தியானம் செய்ய வயது, கடுமையான விதிகள் கிடையாது. தினமும் காலை அல்லது மாலை சில நிமிடங்கள் அமைதியான இடத்தில் மனதை ஒருநிலைப்படுத்தி சுவாசத்தில் மட்டும் கவனம் செலுத்தினால் மிகப்பெரிய மாற்றங்களை வாழ்வில் பெறலாம்.

குடும்ப அமைதி நிலவும் மாலதி, பேராசிரியர், அறிவுத் திருக்கோவில், போடி : வேதாத்திரி மகரிஷி வடிவமைத்து தந்த உடற்பயிற்சி, காயகல்பம், தியானம் அகத்தாய்வு, அகத்தவம், தனிமனித அமைதிக்கான வழிகாட்டல் ஆகும். தொடர் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் தனிநபர் மன அமைதி பெறலாம். இதன் மூலம் குடும்ப அமைதி ஏற்படும். உலக அமைதியை ஏற்படுத்த முடியும். உலகமே ஒரு குடும்பம் அனைவரும் தியானம் செய்வோம் என்பதை சர்வதேச தியானம் தினம் நமக்கு கற்றுத் தருகிறது.






      Dinamalar
      Follow us