ADDED : மார் 18, 2026 05:45 AM
அ நிறம் | அளவு
மூணாறு: தேவிகுளம் எஸ்டேட், லோயர் டிவிஷனைச் சேர்ந்த அனில்குமாரின் பசு, நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்று விட்டு வீடு திரும்பவில்லை
அந்த பசு நேற்று லாக்காடு எஸ்டேட் தேயிலை தோட்ட எண் ஒன்றில் இறந்த நிலையில் கிடந்தது. அதன் உடல் பாதி தின்ற நிலையில் காணப்பட்டதால் புலியிடம் சிக்கி பசு இறந்ததாக தெரியவந்தது. அதனை சம்பவ இடத்தில் வனத்துறையினர் ஆய்வு நடத்தி உறுதி செய்தனர்.
