தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ புலிகள் கணக்கெடுப்பு பணி நிறைவு 'மெமரிகார்டுகள்' ஒப்படைப்பு

 புலிகள் கணக்கெடுப்பு பணி நிறைவு 'மெமரிகார்டுகள்' ஒப்படைப்பு

 புலிகள் கணக்கெடுப்பு பணி நிறைவு 'மெமரிகார்டுகள்' ஒப்படைப்பு


ADDED : மார் 02, 2026 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 05:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கம்பம்: மேகமலை புலிகள் காப்பக பகுதியில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 324 கேமராக்கள் பொருத்தப்பட்டது. கணக்கெடுப்பு பணி நிறைவடைந்ததால் கேமராக்களில் இருந்து 'மெமரிகார்டுகள்' துணை இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

இந்தியாவில் உள்ள 50க்கும் மேற்பட்ட புலிகள் காப்பகங்கள் உள்ளன. இங்கு தேசிய புலிகள் பாதுகாப்பு முகமையின் மேற்பார்வை, வழிகாட்டுதலில் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கணக்கெடுப்பில் பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது. தமிழகத்தில் 5 புலிகள் காப்பகங்களிலும் கணக்கெடுப்பு பணி நடந்தது.

ஸ்ரீவி., மேகமலை புலிகள் காப்பக பகுதிகளில் பிளாக் கவுண்ட், நேர்கோட்டில் சென்று கணக்கெடுப்பு முடிந்தது. அதைத்தொடர்ந்து ஜன.20ல் மேகமலை டிவிஷனில் 324 அதி நவீன கேமராக்கள் கணக்கெடுப்பிற்காக பொருத்தப்பட்டது. இக்கேமராக்கள் பொருத்திய இடத்திலிருந்து 10மீ., துாரத்திற்கு காட்சிகளை பதிவு செய்யும் திறன் கொண்டிருந்தது. கேமராவில் பதிவானதை 'டவுன்லோடு' செய்ய வசதியாக 'மெமரிகார்டுகள்' பொருத்தப்பட்டிருந்தன. கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்ததால் கேமராக்களில் இருந்த 'மெமரிகார்டுகள்' துணை இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக புலிகள் காப்பகத்தினர் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us