ADDED : ஏப் 24, 2026 06:22 PM
அ நிறம் | அளவு
மூணாறு: மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான தென்மலை எஸ்டேட் லோயர் டிவிஷனில் தொழிலாளியின் கண் முன் மூன்று பசுக்களை புலி தாக்கி கொன்றது.
அப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளி மாரிசாமி தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள 7ம் எண் தேயிலை தோட்ட பகுதியில் பசுக்களை மேய்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அருகில் உள்ள வனத்தில் இருந்து வந்த புலி மாரிசாமி கண் முன் பசுக்களை தாக்கியது.
அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாரிசாமி ஓடி உயிர் தப்பினார். புலி தாக்கியதில் தொழிலாளர்களான மாடசாமியின் இரண்டு பசுக்கள், தங்கவேலின் ஒரு பசு ஆகியவை பலியாகின. அச்சம்பவம் தொழிலாளர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
