ADDED : ஆக 31, 2026 12:53 AM

அ நிறம் | அளவு
மூணாறு: மூணாறை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் புலிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் தொழிலாளர் அச்சமடைந்துள்ளனர்.
மூணாறை சுற்றியுள்ள தேயிலை எஸ்டேட்டுகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கூடுதல் வருமானத்திற்காக பசுக்கள் வளர்த்து வருகின்றனர். சில ஆண்டுகளாக அவை புலிகளிடம் சிக்கி தொடர்ந்து பலியாகி வருகின்றன. இந்தாண்டு இதுவரை 33 பசுக்கள் புலிகளிடம் சிக்கி இறந்துள்ளன. காட்டு யானை, புலி உள்பட வனவிலங்கு நடமாட்டத்தால் தொழிலாளர்கள் அச்சத்துடன் வேலைக்கு சென்று வருகின்றனர்.
இதனிடையே மூணாறு அருகே அருவிக்காடு எஸ்டேட்டில் மருத்துவமனை அருகில் நேற்று முன்தினம் இரவு ரோட்டை புலி கடந்து சென்றது.
அதனை அந்த வழியில் வாகனத்தில் சென்றவர்கள் பார்த்தனர். புலி நடமாட்டத்தை நேரில் பார்த்ததால் தொழிலாளர்கள் இடையே அச்சம் அதிகரித்துள்ளது.
