தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ புலிகள் நேர்கோடு முறையில் கணக்கெடுப்பு துவக்கம்

 புலிகள் நேர்கோடு முறையில் கணக்கெடுப்பு துவக்கம்

 புலிகள் நேர்கோடு முறையில் கணக்கெடுப்பு துவக்கம்


ADDED : ஜன 09, 2026 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 09, 2026 05:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கம்பம்: மேகமலையில் புலிகள் கணக்கெடுப்பில் முதல் 3 நாட்கள் 'பிளாக் கவுண்ட்' முடிந்து, அடுத்த 3 நாட்கள் நேர்கோடு கணக்கெடுப்பு துவங்கியுள்ளது.

ஸ்ரீவி. மேகமலை புலிகள் காப்பகம் இந்தியாவின் 51 வது காப்பகமாகவும், தமிழகத்தின் 5 வது புலிகள் காப்பகமாகவும் கடந்த 2020 ல் உருவானது. புலிகள் கணக்கெடுப்பு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அகில இந்திய அளவிலும், ஆண்டிற்கு ஒரு முறை மாநில அளவிலும் நடத்தப்படுகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் கணக்கெடுப்பு 45 நாட்களுக்கும், ஒராண்டிற்கு ஒரு முறை எடுக்கப்படும் கணக்கெடுப்பு 25 நாட்களுக்கு ஒரு முறையும் மேற்கொள்ளப்படுகிறது.

புலிகள் கணக்கெடுப்பு 25 நாட்கள் மேற்கொள்ளப்படுகிறது. முதல் 3 நாட்கள் பிளாக் கவுண்ட் அதாவது 5 கி.மீ. சுற்றளவில் பரவலாக நடந்து சென்று பார்ப்பதாகும். அது முடிந்து நேற்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு நேர் கோட்டில் நடந்து சென்று பார்ப்பது துவங்கி உள்ளது. அதாவது 2 கி.மீ. நேர்கோட்டில் இரண்டு பக்கமும் பார்த்தவாறு 3 நாட்கள் கணக்கெடுப்பு நடைபெறும். அதற்கடுத்து 2 நாட்கள் எடுத்த புள்ளி விபரங்களை ஒருங்கிணைத்து அறிக்கை தயார் செய்யும் பணி நடைபெறும்.

இந்த முறை முடிந்த பின் மரங்களில் கேமரா பொருத்தி, புலிகள் கணக்கெடுப்பு துவங்கும். பின் மரபணு மாதிரி எடுத்தல் என்ற முறையிலும் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

மேகமலையில் 160 வனப் பணியாளர்கள், தன்னார்வலர்கள், வன உயிரின ஆராய்ச்சியாளர்கள் என பல தரப்பினர் இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கணக்கெடுப்பு ஜன. இறுதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us