/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் லாரிகள் பறிமுதல்
/
மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் லாரிகள் பறிமுதல்
ADDED : டிச 25, 2025 05:55 AM

போடி: போடி சந்தைப்பேட்டை தெருவை சேர்ந்தவர் மகாராஜன், இதே பகுதியைச் சேர்ந்த சற்குணம், பாலார்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த பிரபாகரன், துரைராஜபுரம் காலனி சேர்ந்த பாண்திரன், பெரியகுளம் டி. கள்ளிப்பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணி, கார்த்திக், லட்சுமிபுரத்தை சேர்ந்த மோகன்ராஜ், சருத்துப்பட்டியை சேர்ந்த குமரேசன், உத்தமபாளையத்தைச் சேர்ந்த தர்விஸ் மைதீன் ஆகிய 9 பேரும் போடி டி.புதுக்கோட்டை அருகே அம்பர மலை அடிவாரத்தில் அனுமதி இன்றி டிப்பர் லாரிகளில் மணல் அள்ளி கடத்த முயன்றனர்.
போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய சற்குணம், பிரபாகரன், பாலசுப்ரமணி உட்பட ஒன்பது பேர் மீது போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து மணலுடன் ஆறு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர்.

