ADDED : செப் 11, 2026 07:32 PM
அ நிறம் | அளவு
தேனி, செப்.12–தேனி மின்வாரிய அலுவலகம் முன்பு தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மின்வாரியத்தில் தனியார் மயமாவதை கண்டித்தும், ஒப்பந்த முறையில் 10 ஆயிரம் தொழிலாளர் நியமிப்பதை ரத்து செய்யவும், மின் மீட்டர் குளறுபடிக்கு பணியாளர்கள் மீது பழி போடுவதை கண்டித்தும், காலிப்பணியிடங்களை நிரப்ப கோருதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்க தேனி செயலாளர் திருமுருகன் தலைமை வகித்தார். தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் பாலமுருகன், ஜெயராமன், முபாரக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
