UPDATED : ஜூலை 14, 2026 04:03 PM
ADDED : ஜூலை 14, 2026 04:00 PM
ஆன்மிகம் சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: பாலசுப்பிரமணியர் கோயில், பெரியகுளம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, காலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 7:00 மணி.
கோபூஜை : காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி.
சற்குரு சுவாமிகள் குருபூஜை: எம்.சுப்புலாபுரம், ஆண்டிபட்டி, ஆன்மிக சொற்பொழிவு, பஜனை, இரவு 7:00 மணி.
சொற்பொழிவு நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர்: கிருஷ்ணசைதன்யதாஸ், காலை 8:00 மணி முதல்.
பொதுமுன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்: நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி, காலை 6:00 மணி,மரத்தான் போட்டி துவக்கி வைப்பவர்: எஸ்.பி.,பிரவீன்கவுதம். ரத்தான முகாம் காலை 10:00 மணி, துவக்கி வைப்பவர்: கலெக்டர் வைத்திநாதன். ஏற்பாடு: தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை, தேனி.
முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் இலவச பிரசவ திட்ட முகாம்: தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை, கருத்தரித்தல் மையம், தேனி, தலைமை: மகப்பேறு அறுவை சிகிச்சை நிபுணர் வனிதா ருக்மணி. மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.
முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழா: ஓட்டல் இன்டர்நேஷனல், தேனி, தலைமை: தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை முன்னாள் தலைவர் ராஜமோகன், துவக்கி வைப்பவர்: வர்த்தக பிரமுகர் சங்கரநாராயணன், ஏற்பாடு: என்.ஆர். அழகர் ராஜா கல்வி அறக்கட்டளை, கம்பம்வேலி மிஸ்ரா சமூக நல அறக்கட்டளை, காமராஜர் நற்பணி இயக்கம், மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு, மாலை 5:00 மணி.
இலவச பயிற்சிகள்: டூவீலர் பழுது நீக்குதல், மிஷன் எம்ராயிடரி, ஆரி மற்றும் சர்தோசி பயிற்சி, கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம், கருவேல்நாயக்கன்பட்டி, தேனி, காலை 9:30 மணி
------------
பெட்ரோல் ரூ.108.89
டீசல் ரூ.100.73
