ADDED : ஏப் 17, 2026 11:12 PM
கம்பம்:ரூ.8 ஆயிரம் டோக்கன்களை தி.மு.க.வும் ரூ.10 ஆயிரம் டோக்கன்களை அ.தி.மு.க. வும் - தேர்தல் விதிமுறைகளை மீறி வழங்கி வருவதாக த.வெ.க., தேர்தல் கமிஷனுக்கு புகார் மனு அனுப்பியுள்ளது.
தேர்தலில் வேட்பாளர்கள் வெற்றி பெற பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர். தி.மு. க., தேர்தல் அறிக்கையில், ரூ.8 ஆயிரம் டோக்கன் வழங்கப்படும் என்று என்று கூறியிருந்தார்கள். எனவே, தேர்தல் வாக்குறுதியை டோக்கனாக அச்சடித்து தி.மு.க. வேட்பாளர்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய துவங்கி உள்ளனர்.
அ.தி.மு.க., சார்பில் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை டோக்கனாக அச்சடித்து வீடுகளில் அ.தி.மு.க., வினரும் கொடுக்க துவங்கி உள்ளனர். இது குறித்து பரவலாக புகார்கள் எழுந்ததால் தேர்தல் கமிஷன் டோக்கன்கள் கொடுக்க கூடாது என்று உத்தரவிட்டது. தேனி மாவட்டத்தில் இரு திராவிட கட்சிகளும் டோக்கன் விநியோகத்தில் இறங்கி உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கப்பம் த.வெ.க. வேட்பாளர் ஜெகநாத் மிஸ்ரா விதி மீறல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு புகார் மனு மெயிலில் அனுப்பி அவர் கூறியதாவது:
'தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக மக்களை திசை திருப்பி ஓட்டுக்களை பெற இரு திராவிட கட்சிகளும் டோக்கள்களை கொடுத்து வருகிறது. வீடியோ,போட்டோ ஆதாரங்களுடன் தலைமை தேர்தல் கமிஷனுருக்கு புகார் அனுப்பி உள்ளேன் ,'என்றார்.
,
