ADDED : ஏப் 20, 2026 11:36 PM
அ நிறம் | அளவு
தேனி:மாவட்டத்தில் கடந்த மாதம் தக்காளி வரத்து அதிகரித்ததால் கிலோ ரூ. 10 முதல் ரூ.15 வரை விற்பனையாகியது. இம்மாத துவக்கத்தில் அதிகபட்சமாக ரூ.20 வரை விற்பனையானது.
இந்நிலையில் மழை குறைந்து வறண்ட சூழல் நிலவுவதால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை கடந்த 10 நாட்களில் கிலோவிற்கு ரூ. 10 வரை அதிகரித்துள்ளது. தேனி உழவர் சந்தையில் முதல்ரகம் ரூ. 30க்கும், 2ம் ரகம் ரூ.26க்கும் நேற்று விற்பனையானது.
