/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு
/
வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு
ADDED : நவ 16, 2025 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: தக்காளி வரத்து குறைவால் விலை கிலோவிற்கு ரூ.20 வரை அதி கரித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக காய்கறி விலையில் மாற்றம் இல்லாமல் இருந்து வருகிறது. தக்காளி விலை உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் கிலோ ரூ.24ல் இருந்து படிப்படியாக அதிகரித்து நேற்று கிலோ ரூ.44 ஆனது. விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கம்பம் உழவர் சந்தை உதவி நிர்வாக அதிகாரி மாரிச்சாமி கூறுகையில், 'தக்காளி வரத்து இல்லை. ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து வருகிறது. எனவே விலை அதிகரித்து வருகிறது' என்றார்.

