ADDED : ஆக 27, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
தேனி, ஆக.28–தேசிய உணவுபாதுகாப்புச் சட்டத்தின்படி பொது வினியோக திடடத்தில் பயனாளிகளுக்கு அத்தியாவசியப்பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய ஏ.ஏ.ஒய்., பி.எச்.எச்., என்.பி.எச்.எச்., ரேஷன் கார்டு தாரர்கள் இ.கே.ஒய்.சி., சரிபார்க்கும் பணி நடக்கிறது.
இ.கே.ஒய்.சி., என்பது ஆதார் விபரங்களை சரிபார்த்தல், கைவிரல் ரேகை அல்லது கருவிழி பதிவு செய்வதாகும். மாவட்டத்தில் நுாறு சதவீத இ.கே.ஒய்.சி., பணியை நிறைவு செய்ய நாளை(ஆக.,29) ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாமில் இதுவரை கைரேகை பதிவு செய்யாத ரேஷன்கார்டு தாரர்கள் பதிவு செய்யுமாறு கலெக்டர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.
