ADDED : டிச 29, 2025 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலை பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது. இந்தாண்டு நாளை (டிச.30ல்) பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு விழா நடக்கிறது.
தேனி நகர் பகுதியில் அல்லிநகரம் பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர் சிவகணேச கந்த பெருமாள் கோயில் மாவட்டத்தில் கம்பம், போடி, ஆண்டிபட்டி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களிலும் இவ்விழா நடக்க உள்ளது.

