நாளை மறுதினம் சிறப்பு முகாம்: பி.எல்.ஓ.,க்களுக்கு பயிற்சி
நாளை மறுதினம் சிறப்பு முகாம்: பி.எல்.ஓ.,க்களுக்கு பயிற்சி
UPDATED : நவ 19, 2026 06:21 PM
ADDED : நவ 19, 2026 05:42 PM
அ நிறம் | அளவு
தேனி: மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் நாளை மறுதினம்(நவ.21) சிறப்பு முகாம் நடக்கிறது.
முகாமில் வாக்காளர்கள் விவரங்கள் பதிவு செய்வது பற்றி பி.எல்.ஓ.,க்களுக்கு தாலுகா வாரியாக பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது. நேற்று போடி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சுருளி தலைமையில் பயிற்சி முகாம் நடந்தது. அதிகாரிகள் கூறியதாவது: புதிய வாக்காளர்கள் படிவம் 6, வெளிநாடுவாழ் வாக்காளர்கள் படிவம் 6ஏ, பெயர் நீக்கத்திற்கு படிவம் 7, வாக்காளர் விவரம் புதுப்பிக்க அல்லது திருத்தம் செய்ய படிவம் 8 வழங்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 1950 என்ற இலவச தொடர்பு எண்ணை தொடர்பு கொள்ளலாம். https://voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம் என்றனர்.
