தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ தங்கும் விடுதி உரிமையாளர் மீது சுற்றுலா பயணிகள் தாக்குதல்

 தங்கும் விடுதி உரிமையாளர் மீது சுற்றுலா பயணிகள் தாக்குதல்

 தங்கும் விடுதி உரிமையாளர் மீது சுற்றுலா பயணிகள் தாக்குதல்


ADDED : ஜன 29, 2026 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2026 06:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மூணாறு: சுற்றுலா கார் உரசிய சம்பவத்தில் தங்கும் விடுதி உரிமையாளர் உள்ளிட்டோரை தாக்கிய தமிழக சுற்றுலா பயணிகள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

மூணாறு அருகே பள்ளிவாசல் எஸ்டேட், இரண்டாம் மைல் பகுதியில் ரோட்டோரம் நிறுத்தப்பட்டிருந்த காரில் தமிழக சுற்றுலா பயணிகளின் கார் உரசியது. இது குறித்து அப்பகுதியினர் கேட்டபோது இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது காரில் மது போதையில் இறங்கிய சுற்றுலா பயணிகள் 5 பேர், உள்ளூர்வாசிகளை தாக்கினர். அதில் இரண்டாம் மைல் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியின் உரிமையாளர் சிபி 40, அவரது மகன் ரைஹன் 14, விடுதி மேலாளர் மனோஜ் 36, வேறொரு தங்கும் விடுதியை சேர்ந்த ஊழியர் அபிஷேக் 22, ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அடிமாலி தாலுகா மருத்துவமனையில் நான்கு பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த உள்ளூர்வாசிகள் சிலர் சுற்றுலா பயணிகளின் கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதால் பயணிகள் காரில் தப்பிச் சென்றனர். சுற்றுலா பயணிகள் தூத்துக்குடி தங்கம்மாள்புரத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. அவர்களை குறித்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us