/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
' டபுள் டெக்கர்' பஸ்களுக்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு
/
' டபுள் டெக்கர்' பஸ்களுக்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு
' டபுள் டெக்கர்' பஸ்களுக்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு
' டபுள் டெக்கர்' பஸ்களுக்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு
ADDED : ஜன 18, 2026 07:16 AM

மூணாறு: மூணாறில் இயக்கப்படும் இரண்டு ' டபுள் டெக்கர்' பஸ்களுக்கு சுற்றுலா பயணிகள் இடையே அதிக வரவேற்பு உள்ளதால், வருவாயும் அதிகரித்து வருகிறது.
மூணாறின் இயற்கை அழகை ரசிக்கும் வகையில் கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ' ராயல் வியூ டபுள் டெக்கர்' எனும் திட்டத்தில் ' டபுள் டெக்கர்' பஸ் சேவை கடந்தாண்டு பிப்.8ல் பயன்பாட்டுக்கு வந்தது.
சுற்றுலா பயணிகள் பஸ்சில் பயணித்தவாறு சுற்றுச்சூழலை ரசிக்கும் வகையில் பஸ் சுற்றிலும், மேல் கூரையும் கண்ணாடி இழை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பஸ் பழைய மூணாறில் உள்ள அரசு பஸ் டிப்போவில் இருந்து தினமும் காலை 9:00, மதியம் 12:30, மாலை 4:00 மணிக்கு இயக்கப்படுகிறது.
இந்த பஸ் மூலம் டிச.31 வரையிலான கணக்குபடி ரூ.1.22 கோடி வருவாய் கிடைத்தது.
அதிகரிப்பு: ' டபுள் டெக்கர்' பஸ்க்கு பயணிகள் இடையே நன்கு வரவேற்பும், வருவாயும் கிடைத்ததால் மேலும் ஒரு ' டபுள் டெக்கர்' பஸ் ஜன.2ல் பயன்பாட்டுக்கு வந்தது.
அந்த பஸ் ஜன.4 முதல் இயக்கப்பட்ட நிலையில் ஒரு வாரத்தில் 720 பயணிகள் பயணம் செய்தனர்.
அதன் மூலம் ரூ.2.57 லட்சம் வருவாய் கிடைத்தது. இந்த பஸ் அரசு பஸ் டிப்போவில் இருந்து தினமும் காலை 8:00, 11:30, மதியம் 3:00 மணிக்கு இயக்கப்படுகிறது.
இரண்டு பஸ்களிலும் கட்டணம், வழித்தடம் ஆகியவற்றில் எவ்வித மாற்றமும் இல்லை.

