ADDED : செப் 21, 2026 04:52 PM
அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி, செப்.22-
ஆண்டிபட்டி பகுதியில் மண் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் ஆண்டிபட்டி- தெப்பம்பட்டி ரோடு சீனிவாசா நகர் அருகே வாகன சோதனையில் இருந்தனர். அந்த வழியாக சென்ற டிராக்டரை மறித்து சோதனை செய்தனர். டிராக்டரில் அரசு அனுமதி இன்றி கரம்பை மண் கடத்தி செல்வது தெரியவந்தது. ஒரு யூனிட் கரம்பை மண்ணுடன் டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். டிராக்டரை ஓட்டிச் சென்ற கோவில்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் 59, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
