/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பி.எல்.ஓ.,க்களுக்கு பயிற்சி துவக்கம்
/
பி.எல்.ஓ.,க்களுக்கு பயிற்சி துவக்கம்
ADDED : அக் 29, 2025 09:27 AM
தேனி: வாக்காளர்பட்டியல் தீவிர திருத்தப்பணிகள் தொடர்பாக பி.எல்.ஓ.,க் கள், மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சிகள் துவங்கி உள்ளன.
தேனி மாவட்டத்தில் நவ., 4ல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் துவங்குகிறது. பி.எல். ஓ.,க்கள் (ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள்) வாக்காளர்கள் வீடுகளுக்கு சென்று படிவங்கள் வழங்கி உறுதி செய்ய உள்ளனர். இதற்காக பி.எல்.ஓ.,க்கள், பி.எல்.ஓ., மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் துவங்கி உள்ளன.
ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் ஆண்டிபட்டி சட்டசபை தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் சண்முகசுந்தரம் தலைமையில் பயிற்சி வகுப்பு நடந்தது. தாசில்தார் ஜாகீர்உசேன் முன்னிலை வகித்தார். துணைதாசில்தார் கண்ணன் பயிற்சியை ஒருங்கிணைத்தார். கம்பம் சட்டசபை தொகுதி, சின்னமனுார் நகராட்சி அலுவலகத்தில் உத்தமபாளையம் தாசில்தார் கண்ணன் தலைமையில் பயிற்சி வகுப்பு நடந்தது. நகராட்சி கமிஷனர் கோபிநாத் முன்னிலை வகித்தார். தேர்தல் உதவியாளர் ரேவதி பயிற்சியை ஒருங்கிணைத்தார்.

