ADDED : மார் 24, 2026 06:24 PM
அ நிறம் | அளவு
தேனி:மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள 36 தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் பயிற்சி வகுப்பு நடந்தது.
பயிற்சியில் கணக்கெடுப்பு பணியில் டிஜிட்டல் முறையில் படிவம் பூர்த்தி செய்வது, பேரூராட்சி, ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் தகவல்களை ஒருங்கிணைந்து அரசுக்கு சமர்ப்பிப்பது உள்ளிட்டவை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.
கலெக்டர் ரஞ்ஜீத்சிங், டி.ஆர்.ஓ., ராஜகுமார் பங்கேற்று கணக்கெடுப்பு பணி பற்றி ஆலோசனை வழங்கினர். மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பு இணை இயக்குனர் சுபா, ஒருங்கிணைப்பாளர் லோகநாதன், மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ் பயிற்சி அளித்தனர்.
