UPDATED : அக் 24, 2026 06:29 PM
ADDED : அக் 24, 2026 06:26 PM

கூடலுார்: கூடலுார் அரசு விதைப் பண்ணையில் குள்ளப்புரம் வேளாண் தொழில் நுட்பக் கல்லுாரி 4ம் ஆண்டு மாணவர்கள் விவசாயிகளுக்கு எருக்கு கரைசல் தயாரிப்பது குறித்த பயிற்சி அளித்தனர்.
கிராம தங்கல் திட்டத்தின் கீழ் குள்ளப்புரம் வேளாண் தொழில் நுட்பக் கல்லுாரி மாணவர்கள் சாரதி, நிதிஷ், யுகேஷ், தரணிதரன், உசைன், அப்ரின் அகமது, கோகுல், நதிஷ்குமார், சந்தோஷ், கிஷோர் பிரியன், ஸ்ரீவிஷ்ணு, பிரதீஷ் குமார், அஸ்வஜித், ஜெகதீஷ் ஆகியோர் கம்பம் வட்டாரத்தில் தங்கி விளைநிலங்களில் நேரடி பயிற்சி பெற்று வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கூடலுார் அரசு விதைப் பண்ணையில் நெல், தென்னை உள்ளிட்ட பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த எருக்கு கரைசல், மீன் அமிலம் தயாரிப்பதற்கான செய்முறையை விவசாயிகளுக்கு செய்து காட்டினர். அதனைப் பயன்படுத்தும் முறைகளையும் தெரிவித்தனர். மேலும் இயற்கை வேளாண்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். விவசாயிகள் கலந்து கொண்டனர்.
