ADDED : ஏப் 09, 2026 05:09 PM
அ நிறம் | அளவு
தேனி:தேனி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் ஓட்டுச்சாவடிகளில் நுண்பார்வையாளர்களாக பணிபுரிபவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. அவர்களுக்கு மின்னனு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கையாள்வது, தகவல் தொடர்பு, கண்காணிப்பு உள்ளிட்டவை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.
தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் பீம்சிங், வினய் பிரதாப்சிங் முன்னிலை வகித்தனர். டி.ஆர்.ஓ., ராஜகுமார், கலெக்டர் நேர்முக உதவியாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தாசில்தார் செந்தில்குமார், ஆர்.ஐ., இளங்கோ பயிற்சி வழங்கினர்.
