ADDED : நவ 23, 2024 06:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி; பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் மரக்கன்றுகள் நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசு அறிவுறுத்தியதை தொடர்ந்து இப்பள்ளி வளாகத்தில் 20க்கும் மரக்கன்றுகள் நடப்பட்டன.
சண்முகசுந்தரபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக முன்னாள் துணைத் தலைவர் அய்யணன், தலைமை ஆசிரியை சுகுணா, ஆசிரியை மேனகா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் நந்தினி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டனர்.
மரக்கன்றுகள் நடுவதின் அவசியம், அவற்றை பாதுகாப்பது, மரங்களால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.