ADDED : டிச 22, 2024 09:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : கோட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார்.
வேம்பு, அரசு, புங்களை உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடவு செய்யப்பட்டது. விழாவில் சின்னமனுார் வனசரக அலுவலர்கள், பள்ளி என்.எஸ்.எஸ்., பசுமைப்படை மாணவர்கள் பங்கேற்றனர். என்.எஸ்.எஸ்.,திட்ட அலுவலர் மாணிக்க ராஜா ஒருங்கிணைத்தார்.