நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த மக்களுடன் முதல்வர் முகாமில் பலரும் காய்கறி விற்பனைக்கு தள்ளுவண்டி கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.
தேனி தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடந்த விழாவில் தேனி வட்டாரத்தை சேர்ந்த 25 பேருக்கு 3.75 லட்சம் செலவில்நடமாடும் காய்கறி விற்பனைக்கான தள்ளு வண்டிகள் வழங்கப்பட்டது.
எம்.எல்.ஏ., சரவணக்குமார் தலைமை வகித்தார். தோட்டக்கலைத் துணை இயக்குநர் நிர்மலா முன்னிலை வகித்தார்.
உதவி இயக்குநர்கள் மணிகண்டன், ராஜமுருகன், நந்தினி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.