UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 03:52 PM
அ நிறம் | அளவு
கம்பம்: கம்பம் வடக்கு போலீசார் பைபாஸ் ரோட்டில் ரோந்து சென்றனர்.
அப்பகுதியில் சந்தேகப்படும் படி கம்பம் தாத்தப்பன் குளம் ஜாபர் உசேன் 24, மதுரை மாவட்டம் வண்டியூரை சேர்ந்த 17 வயது சிறுவனை விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள 1.5 கி.கி., கஞ்சா இருந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். இதில் 17 வயது சிறுவனை சிறார் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பினர்.
