/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வனப்பகுதியில் தீ வைத்த இருவர் கைது
/
வனப்பகுதியில் தீ வைத்த இருவர் கைது
ADDED : மார் 16, 2024 06:27 AM
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி பட்டா நிலத்தில் செடி கொடிகளுக்கு வைத்த தீ வனப்பகுதியில் பரவியது. இதில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
தேவதானப்பட்டி வனச்சரகம், பாம்பார் பிரிவு அம்புருவி காப்புக்காடு கொசுஓடை பகுதியில் தீ தடுப்பு சம்பந்தமாக நேற்று முன்தினம் இரவு ரேஞ்சர் டேவிட் ராஜா தலைமையில் வனக்காப்பாளர்கள் உட்பட 5 பேர் தனிக்குழுவினர்
ரோந்து சென்று கொண்டிருந்தனர். கொடைக்கானல்- தேவதானப்பட்டி இணைப்பு பகுதியில் தீ எரிவதைக்கண்டு தனிக்குழுவினர் தீயை அணைத்து கொண்டிருந்த போது, அவ்வழியாக அடையாளம் தெரியாத இருவர் ஓடினர். வெவ்வேறு திசையில் ஓடியவர்களை தனிக்குழுவினர் விரட்டி பிடித்தனர்.
கொடைக்கானல் தாலுகா வெள்ள கெவி ஊராட்சியை சேர்ந்த ராமன் 53. அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் ஆண்டவர் 54, ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், இவர்களது பட்டா நிலத்தில் செடி, கொடிகளை அகற்றி தீ வைக்கும் போது, வனப்பகுதியில் பரவியது தெரியவந்தது.
இவர்களிடமிருந்து தீப்பெட்டி, அரிவாள் கைப்பற்றி வனத்துறையினர் கைது செய்து, பெரியகுளம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

