ADDED : ஜூன் 14, 2026 11:18 PM

அ நிறம் | அளவு
-தேவதானப்பட்டி-: ஒடிசாவில் இருந்து தேனி மாவட்டத்திற்கு கன்டெய்னர் லாரியில் கஞ்சா கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த புண்ணியராஜ் 40. இவரது நண்பர் மணிகண்டன் 27. இருவரும் லாரி டிரைவர்கள். இவர்கள் ஒடிசாவில் இருந்து தேனி மாவட்டத்திற்கு கன்டெய்னர் லாரியில் கஞ்சா கடத்தி வருவதாக காட்ரோடு போலீஸ் சோதனைச் சாவடிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த லாரியை நிறுத்தி தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் கீதா சோதனையிட்டார். அதில் 2 கிலோ எடையுள்ள 33 பொட்டலங்களாக 66 கிலோ கஞ்சா இருந்தது. அவற்றை கைப்பற்றிய போலீசார், புண்ணியராஜ், மணிகண்டனை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கஞ்சாவை கம்பத்திற்கு கடத்திச்செல்ல முயன்றது தெரிந்தது.
