ADDED : மார் 10, 2024 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : போடி மீனாட்சியம்மன் கண்மாயில் மீன்வளத்துறை கட்டுப்பாட்டில் மீனவர் சங்க காவலர்கள் காவல் காத்து வருகின்றனர். சில நாட்களாக கண்மாயில் மீன்கள் திருடு போனது.
மீன்வளத்துறை ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மீனாட்சிபும் பச்சமுத்து 48., செல்லச்சாமி 26,மீன்களை திருடி உள்ளனர். இவர்களிடம் மீன் பிடிக்க கூடாது என்றனர். ஆத்திரம் அடைந்த இருவரும் தகாத வார்த்தையால் பேசி, அரிவாளை காண்பித்து வெட்டாமல் விடமாட்டோம் என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ஆய்வாளர் புகாரில் பச்சமுத்து, செல்லச்சாமியை போடி தாலுாகா போலீசார் கைது செய்தனர்.

