UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 06:16 PM
அ நிறம் | அளவு
கூடலுார்: கேரளா வண்டிப்பெரியாறு தேங்காக்கல் பகுதியைச் சேர்ந்த லாசர் என்பவருக்கு சொந்தமான ஏலக்காய் கடை உள்ளது.
நேற்று முன்தினம் இரவு கடையில் ஏலக்காய் உலர்த்தி வைக்கும் அடுப்பு பகுதியை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள் 22 கிலோ ஏலக்காயை திருடி சென்றுள்ளனர். இது தொடர்பாக வண்டிப்பெரியாறு போலீசார் விசாரணை நடத்தினர். வண்டிப்பெரியாரைச் சேர்ந்த பாண்டி 38, அருண் 36, ஆகிய இருவர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களை கைது செய்து விசாரிக்கின்றனர். திருடப்பட்ட ஏலக்காயின் மதிப்பு ரூ. 66 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர்.
