ADDED : ஜூன் 07, 2025 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி:போடி பங்கஜம் பிரஸ் தெரு வெங்கடேசன் 36. கம்ப்யூட்டர் சென்டர் நடத்தினார்.இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மூன்று ஆண்டுகளாக மது அருந்தியுள்ளார். மதுவை நிறுத்த முடியாததால் மனம் உடைந்த வெங்கடேசன் நேற்று வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். வெங்கடேசன் தந்தை பழனிராஜ் புகாரில் போடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
போடி: விசுவாசபுரம் சி.எஸ்.ஐ., சர்ச் தெருவை சேர்ந்தவர் அய்யனார் 39. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டார். நேற்று முன்தினம் வயிற்று வலி தாங்க முடியாத நிலையில் விஷம் குடித்துள்ளார். சிகிச்சை பலன் இன்றி நேற்று இறந்தார்.