ADDED : செப் 12, 2025 04:43 AM
தேனி: தேனியில் ஒரே தெருவில் 2 தெரு நாய்கள் இறந்து கிடந்தன. யாரேனும் விஷம் வைத்து கொன்றார்களா என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தேனிநகராட்சியில்தெரு நாய்கள் அதிகம் காணப்படுகின்றன. சில இடங்களில் டூவீலர்களில் செல்பவர்களை துரத்துவதால் பலர் தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர்.
கடிப்பதால் பலரும் மருத்துவ சிகிச்சை பெறும் நிலை தொடர்கிறது. இந்நிலையில் நகராட்சி 13 வது வார்டு பயர் சர்வீஸ் ஓடைத் தெருவில் 2 நாய்கள்நேற்று முன்தினம்மர்மான முறையில் ரோட்டில் இறந்து கிடந்தன.
தெரு நுழைவாயில் பகுதியில் ஒரு நாய்உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தது. இந்த மூன்று தெரு நாய்கள் மீதும் வாகனங்கள் ஏறிய தடமோ, கட்டையால் தாக்கிய காயங்கள் ஏதும் இல்லை.
இதனால் இந்த நாய்களுக்கு யாரேனும் விஷம் வைத்து கொன்றனரா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் தெரிவித்தனர்.