ADDED : மே 30, 2026 01:58 AM
அ நிறம் | அளவு
பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம், தென்கரை தெற்கு தெருவை சேர்ந்தவர் சுந்தர், 26. இவரது நண்பர் செல்வ கணபதி, 43. இருவரும் மே 26ல் பெரியகுளம் - தேனி சாலையில் நடந்து செ ன்றனர்.
பின்னால் வந்த லோடு ஆட்டோ, திடீரென இவர்கள் மீது மோதியது.
காயமடைந்த இருவரும், தேனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சுந்தர் நேற்று முன்தினம் இறந்தார். செல்வகணபதி நேற்று இறந்தார். ஆட்டோ ஓட்டிய 17 வயது வாலிபர் அதன் உரிமையாளரை தென்கரை போலீசார் தேடி வருகின்றனர்.
