ADDED : மார் 17, 2026 06:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: மூணாறு அருகே பெரியவாரை எஸ்டேட், சோலைமலை டிவிஷனில் ராஜேஷ் 33, மனைவி, இரண்டு மகன்களுடன் வசித்தார். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இரவு இருவர் இடையே தகராறு ஏற்பட்டது. அதன் பிறகு வீட்டினுள் ராஜேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மூணாறில் செட்டில்மென்ட் காலனியில் வசித்த பிரதாப்சிங் 45, ராஜமலையில் வனத்துறை வாச்சராக வேலை செய்தார். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மூணாறு போலீசார் இரண்டு சம்பவங்கள் குறித்து விசாரிக்கின்றனர்.

