ADDED : பிப் 19, 2025 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி என்.ஆர்.டி., நகர் பாண்டியன் 56. கட்டட பொறியாளர்.
2 மாதங்களாக தேனி என்.ஆர்.டி., நகரில் காந்திஜி தெருவில் ராமசுப்பிரமணியம் என்பவரது வீட்டை பராமரிப்பு வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் பிப். 16ல் அங்கு சென்று பார்த்த போது, போடி சங்கராபுரம் கருப்பையா 29, தேனி பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோயில் தெரு செல்வம் 33, பொம்மையக் கவுண்டன்பட்டி ராஜேஷ் 29, ஆகிய மூவரும் இணைந்து செல்வத்திற்கு சொந்தமான ஆட்டோவில், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள ஜெனரேட்டரை திருடிச் சென்றது தெரிந்தது.
பாண்டியன் புகாரில், தேனி எஸ்.ஐ., இளங்குமரன் கருப்பையா, செல்வத்தை கைது செய்து,தலைமறைவான ராஜேஷை தேடி வருகின்றனர்.

