/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தொழிலாளி உயிரிழந்த வழக்கில் இருவர் சரண்
/
தொழிலாளி உயிரிழந்த வழக்கில் இருவர் சரண்
ADDED : டிச 08, 2024 06:18 AM
தேனி : பழனிசெட்டிபட்டி தாமோதரன்42, காலி பாட்டில்களை சேகரித்து விற்பனை செய்தார். இவர் நவ.,6ல் பழனிசெட்டிபட்டி அணைக்கருப்பசாமி கோயில் அருகே காயங்களுடன் கிடந்தார். அவரை மீட்டு தேனி மருத்துவக்கல்லுாரியில் சேர்த்தனர். வீட்டிற்கு அவரை அழைத்து வந்த மறுநாள் தாமோதரன் உயிரிழந்தார். இவரது தந்தை போஜராஜ் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், 'அல்லிநகரம் கக்கன்ஜி காலனி பிரவீன்குமார்23 , ஹரிஸ்பிரவீன் 19, விஜயபாரதி 19, அன்புச்செல்வம் 22,புவனேஷ்வரன் 18, மற்றும் 2 சிறார்கள் தென்னை மட்டையால் தாக்கியதால் தாமோதரன் காயமடைந்தார்.
இவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடினர். இந்நிலையில் அருண்குமார், மாயக்கண்ண தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.