UPDATED : அக் 14, 2026 07:23 PM
ADDED : அக் 14, 2026 07:18 PM
அ நிறம் | அளவு
தேனி: முத்தலாம்பாறையை சேர்ந்தவர் சிங்கம் 53.
இவர் சோலைத்தேவன்பட்டி அரசு நடுநிலைபள்ளி ரோட்டில் டிராக்டரில் கிராவல் மணலுடன் சென்றார். அவ்வழியாக ரோந்து சென்ற கடமலைக்குண்டு போலீசார் அவரை நிறுத்தி சோதனை செய்தனர். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக 1.25 யூனிட் மணல் எடுத்து சென்றது தெரிந்தது. சிங்கத்தை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர். கரட்டுபட்டி ரோட்டில் டிராக்டரில் அனுமதிக்கப்பட்ட 1 யூனிட்டிற்கு பதில் 1.25 யூனிட் கிராவல் மண் எடுத்து சென்ற அதே பகுதியை சேர்ந்த முத்துகுமாரை கடமலைக்குண்டு போலீசார் கைது செய்தனர். இருவழக்குகளில் 2 டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
